கோயம்பேட்டில் பெரும் பரபரப்பு.. "அதிகாரியை ஒருமையில் திட்டிய டிரைவர்கள்" - கொந்தளித்த பயணிகள்

சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்படாததால், ஆத்திரமடைந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலைக்கு மட்டுமே பேருந்துகளை இயக்கி மதுரை, திருச்சி, பெரம்பலூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கவில்லை என்றும், பேருந்துகள் குறித்து கேட்டால் அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொல்வதாகவும் பயணிகள் குற்றம்சாட்டினர். பின்னர் அங்கு சென்ற காவலர்கள் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தை கைவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com