"சில்லறை இல்லைனா பஸ்ஸை விட்டு இறங்கு" பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய கண்டக்டர் "அவர் தள்ளி விட்டு ஒரு பெண்ணுக்கு அபார்ஷன் ஆகியிருக்கு"
• சிவகங்கை மாவட்டம் குட்டிதின்னி கிராமத்தை சேர்ந்தவர் சோபனாதேவி.
• இவர் சிவகங்கை வழியாக மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய நிலையில், 200 ரூபாய் நோட்டை அளித்து டிக்கெட் கேட்டுள்ளார்.
• ஆனால் நடத்துனர் வேளாங்கன்னியோ, சில்லறை இல்ல என கூறியதோடு, சோபனாதேவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
• இதனைக்கண்ட சக பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
• இதனையடுத்து பேருந்து காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
• அங்கு பயணிகளும், ஏற்கனவே வேளாங்கன்னி தள்ளி விட்டதால் அபாசர்னுக்கு ஆளான பூவந்தி என்பவரும் வேளாங்கன்னியோடு வாக்குவாதம் செய்தனர்.
• தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கன்னி மீது புகார் அளிக்கப்பட்டது.
• புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், இருவரையும் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
