பேருந்தை முந்த முயன்ற இரு சக்கர வாகனம்... நொடிப்பொழுதில் இளம்பெண்ணின் உயிரை பறித்த பேருந்து - சென்னையில் அதிர்ச்சி
சென்னை அமைந்தரை பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்துள்ளார். சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் எதிரே, இருசக்கர வாகனம் ஒன்று தனியார் பேருந்தை முந்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், சங்கீதா என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
