புதைக்கப்பட்ட சிறுமியின் தலை திடீர் மாயம் - சூரிய கிரகணத்தில் பூஜையா? | அதிர்ந்து போன பெற்றோர்

x

மதுராந்தகம் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை மர்மநபர்கள் வெட்டி எடுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த சித்திரவாடி பகுதியில் மின்கம்பம் சாய்ந்து உயிரிழந்த 12 வயது சிறுமி கிருத்திகாவின் உடல் கடந்த 15ம் தேதி மயானத்தில் புதைக்கப்பட்டது. புதன்கிழமை காலை அந்த இடத்தில் பூஜை பொருட்கள், தலைமுடி இருந்ததாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், வருவாய்த் துறையினர் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்த போது சிறுமி உடலில் தலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடல் மறுபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தலையை வெட்டி எடுத்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர். சூரிய கிரகணம் என்பதால் தலையை வைத்து பூஜை நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்