சாலையில் செல்லும் போதே தீ பிடித்து எரிந்த புல்லட் - பரபரப்பு காட்சிகள்..

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே அடுக்கம் கிராமத்தை சேர்ந்த ஹேமசந்தர் மழவந்தாங்கல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புல்லட்டின் முன்பகுதியில் கரும்புகை வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த ஹேமச்சந்தர் உடனடியாக வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்னர் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது.

X

Thanthi TV
www.thanthitv.com