காஸ்ட்லி பைக் மட்டும் தான் திருடுவேன்... இரவை தன்வசமாக்கிய புல்லட் திருடன்

x

உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் தனது இருசக்கர வாகனத்தை, அருகில் உள்ள நகை அடகுக் கடை முன்பு நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் அந்த இடத்திலிருந்து மாயமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், அடகு கடையின் சிசிடிவி காட்சிகளை பார்த்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்