1 டன் எடையில் எருமை - "இவருக்கு ஒரு செல்ல பேரு இருக்கு"

x

கேரளாவில், சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட எருமை மாடு ஒன்று வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம், மங்கடா பகுதியில் அப்பாஸ் என்பவர் ஜாபராபாத் என்ற வகையிலான எருமை மாட்டினை வளர்த்து வருகிறார். தனது மகனுக்காக 7 மாத கன்றாக இதனை வாங்கிய போது, சுமார் 55 கிலோவில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இதன் எடை ஆயிரம் கிலோவாக உள்ளது. கட்டப்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எருமை மீது, அக்கம்பக்கத்தில் வசிக்கும் சிறுவர்கள் சவாரி செய்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்