கொடூரமாக நடந்த பழிக்கு பழி கொலை.. தாம்பரத்தில் பயங்கரம்.. சிக்கிய 8 பேர்

x

சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்.

இவர் நேற்று முன் தினம் ஆதனூர் பிரதான சாலையில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வெங்கடேசனை அதேப்பகுதியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.

படுகொலையில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கடந்த வருடம் மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது இமான், மற்றும் முகமது இஸ்மயில் ஆகியோர் படுகொலை செய்யட்ட வழக்கில், வெங்கடேசன் என்பவர் ஈடுபட்டிருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வெங்கடேசனை படுகொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்