• டை ஹார்டு படத்தின் மூலம் உலகம் முழுக்க ரசிகர்களை கவர்ந்த நடிகர் ப்ரூஸ் வில்லிஸ்-க்கு Fronto Temporal Dementia என்ற அரிய வகை குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது.
• கடந்த ஆண்டு Aphasia என்ற பேசும் குறைபாடு பாதிப்பு காரணமாக இனி அவர் படங்களில் நடிக்க மாட்டார் என அவரது குடும்பத்தினர் அறிவித்திருந்தனர் .
• ஆனால் அது Fronto Temporal Dementia-வின் பல அறிகுறிகளில் ஒன்று மட்டுமே என்று தற்போது தெரிய வந்துள்ளது.
• மூளையில் உள்ள முன்மடல் மற்றும் பொட்டு மடல் சுருங்க தொடங்குவதுதான் இந்த குறைபாடு.
• இதனால் நடத்தையில் மாற்றம், பேசுவது மற்றும் புரிந்துகொள்வதில் சிரமம், முரட்டுத்தனமாக் நடந்துகொள்வது, காரணம் இல்லாமல் அழுவது உள்ளிட்ட பல சிரமங்கள் ஏற்படும்.
• தனது ஆக்ஷன் அதிரடி நடிப்பில் பல கோடி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகருக்கு 67 வயதில் இப்படி ஒரு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
• இந்த குறைபாட்டை குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதை விட மோசமான செய்தியாக உள்ளது.
• படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு தனது குடும்பத்துடன் அவர் செலவிட்ட நிமிடங்களை வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.