அக்காவின் ரகசிய காதலனுக்கு ஸ்கெட்ச் போட்ட தம்பி…கூட்டாளிகளோடு சேர்ந்து கதையை முடித்த கொடூரம்…

x

கொல்லப்பட்டவர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகேயுள்ள தர்காஸ் பகுதியை சேர்ந்த 33 வயதான மனோகரன். அதே பகுதியில் நண்பர்களுடன் ஜேசிபி இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்திருக்கிறார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், திருமணமாகாத மனோகரனுக்கு கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறையில் பணியாற்றி வரும் சங்கீதா என்பவரோடு தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு, சில ஆண்டுகளுக்கு முன்பு மனோகரனுக்கும் கஞ்சா கும்பல் ஒன்றுக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

மனோகரனின் கொலைக்கான காரணம், கஞ்சா முன்விரோதமா ? அல்லது கள்ளக்காதலா ? என இருவேறு கோணத்தில் விசாரணை வேகமெடுத்திருக்கிறது. மனோகரனுடன் தகாத உறவிலிருந்த பெண் போலீஸ் சங்கீதா குறித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் ப்ளாஸ்பேக் கதைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆம், கடந்த 2021 -ம் முதல் திருமணத்தை மறைத்து சங்கீதா இரண்டாவதாக யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஒரே ஸ்டேஷனில் சங்கீதா பெண் போலீஸாகவும், அதே ஸ்டேஷனில் யுவராஜ் டிவைராகவும் பணியாற்றி வந்திருக்கிறார்கள். மூடி மறைக்க நினைத்த சங்கீதாவின் முதல் திருமணம் குறித்த சஸ்பென்ஸ் வெகுநாட்கள் தாக்குப்பிடிக்கவில்லை.

சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருப்பது தெரியவர யுவராஜ் வீட்டில் கலவரமே வெடித்திருக்கிறது. கணவர் குடும்பத்தினரின் கேள்விகளை சமாளிக்க முடியாத சங்கீதா யுவராஜை பிரிந்துச்சென்றிருக்கிறார். மனைவியை பிரிந்து காதல் நினைவுகளோட துடிதுடித்து கொண்டிருந்த யுவராஜ் திடீரென விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சங்கீதாவை சஸ்பெண்ட் செய்திருந்தனர்.தண்டனை காலம் முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த சங்கீதாவிற்கு "ஐ லவ் யூ" சொல்லி ஹார்ட்டீன் விட்டிருக்கிறார் மனோகரன். இருவரும் வெகு நாட்கள் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்திருக்கிறார்கள்.

ஒரு புறம், மனோகரனின் காதல் கதைகளை பற்றி விசாரித்துக்கொண்டிருந்த போதே,ம் மனோகரனுக்கு கஞ்சா கும்பலுக்குமிடையிலான முன்விரோதம் குறித்த விசாரணையும் அதன் இறுதிக்கட்டத்தை வந்தடைந்திருக்கிறது.தர்காஷ் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான அருண் என்பவரும், மனோகரனும் அடிக்கடி மோதி கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதோடு மனோகரன் கொலை செய்யப்பட்ட பிறகு அருண் தலைமறைவானது அவர் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.அருணின் பழக்கவழக்கம், தொடர்புகள் குறித்து நடந்த விசாரணையில், அவரும், மனோகரனின் ரகசிய காதலி சங்கீதாவுடன் தொடர்பில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆம், அருணுக்கு தெரியாமல் மனோகருடனும், மனோகரனுக்கு தெரியாமல் அருணுடனும் சங்கீதா டூயட் பாடியுள்ளதாக கூறபடுகிறது. இந்நிலையில், சங்கீதாவின் சகோதரர் அஜித்குமார் என்பவர் மனோகரனுக்கு எதிராக திரும்பி இருக்கிறார். அருணிடம் அக்காவின் கள்ளக்காதல் குறித்த ரகசியத்தை உடைத்திருக்கிறார். ஏற்கனவே மனோகரன் மீது ஆத்திரத்திலிருந்த அருணுக்குள் இது கொலைவெறியை தூண்டி இருக்கிறது. இருவரும் சங்கீதாவிற்காக காதல் யுத்தம் நடத்தி இருக்கிறார்கள். ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த அருண், கூட்டாளிகளின் உதவியோடு மனோகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார். சம்பவம் நடந்தன்று கொண்டமங்கலம் வழியாக சென்றுக்கொண்டிருந்த மனோகரனை வழிமறித்த அந்த கும்பல் சாலையில் அவரை ஓட ஓட வெட்டி கொலை செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொலைவழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் காவல்துறையினர் கொலையாளிகள் அருண் மற்றும் அவரின் கூட்டாளிகளை தொடர்ந்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்