புளிய மரத்தில் புளி உளுக்குவதில் தகராறு..தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

x

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மற்றும் சங்கர். சகோதரர்களான இருவருக்கும், திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இடத் தகராறு காரணமாக சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சங்கருக்கு சொந்தமான இடத்தில் உள்ள புளியமரத்தில், ராஜேந்திரன் குடும்பத்தினர் புளி உலுக்கியுள்ளனர். இதனால் அண்ணன் தம்பதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ராஜேந்திரன் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியதில், படுகாயமடைந்த சங்கர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கவுண்டன், கவிதா ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்