பொய் வழக்கில் தம்பி கைது.. கிணற்றில் குதித்த திருநங்கை - நீதிமன்ற வளாகத்தில் அதிர்ச்சி

x

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில், திருநங்கை ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த செல்வி என்ற திருநங்கை, தனது தம்பியை போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை போலீசார் கண்டு கொள்ளவில்லை என கூறி சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்படவே, அருகே இருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் செல்வியை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்