லாரியை முட்டியதால் உடைந்த தந்தம்...ஆவேசமடைந்து மிரண்டு ஓடிய யானை - பரபரப்பு காட்சிகள்

x

லாரியை முட்டியதால் உடைந்த தந்தம்...ஆவேசமடைந்து மிரண்டு ஓடிய யானை - பரபரப்பு காட்சிகள்

கேரள மாநிலம் திருச்சூரில், சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணாபுரத்தில், கோயில் திருவிழாவுக்காக வரவழைக்கப்பட்ட யானை, சாலையோரம் நின்றிந்த லாரியை முட்டியது. இதில், தந்தம் உடைந்ததால் ஆவேசமடைந்த யானை, சாலையில் மிரண்டு ஓடியது. மேலும், சாலையோரம் இருந்த மின் கம்பத்தையும் உடைக்க முயன்றதால், பரபரப்பு நிலவியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்பு படையினர், ஒரு மணி நேரம் போராடி யானையை அடக்கினர். மேலும், யானை மீது அமர்ந்திருந்த பாகனையும் பத்திரமாக மீட்டனர்.

https://youtu.be/OtPISGRxa9E


Next Story

மேலும் செய்திகள்