127 ஆடுகள், 800 சேவல்கள், 2,500 கிலோவில் அண்டா அண்டாவாக கம கம பிரியாணி - முனியாண்டி சுவாமி கோயிலில் திருவிழா

x
  • திருமங்கலம் அருகே முனியாண்டி கோயிலில் நடைபெற்ற 88-வது ஆண்டு பிரியாணி திருவிழாவில், 2500 கிலோ அரிசியில் பிரியாணி தயார் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  • மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டிசுவாமி திருக்கோயிலில் 88-வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் விமரிசையாக நடைபெற்றது.
  • இதனையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, முனியாண்டிசுவாமிக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் செய்து வழிபட்டனர்.
  • இந்த விழாவில் வடக்கம்பட்டி சுற்றுவட்டார கிராமத்தினர் மட்டுமின்றி, முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
  • தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 127 ஆடுகளும், 800-க்கும் மேற்பட்ட சேவல்களும் முனியான்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு, 2500 கிலோ பிரியாணி அரிசியில், பிரியாணி தயார் செய்யப்பட்டது.
  • தொடர்ந்து பக்தர்களுக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்