பிரிட்டன் ராணி இறுதி சடங்கு... இந்த 6 நாடுகளுக்கு அழைப்பு இல்லை... காரணம் என்ன?

x

இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் உலகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

புதிய அரசராகப் பொறுப்பேற்ற சார்லஸுக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்த போதும், உக்ரைன் மீதான படையெடுப்பால் பிரிட்டன்-ரஷ்யா இடையேயான உறவு சரிந்தது. இதனால் ரஷ்யாவின் சார்பில் இறுதிச் சடங்கில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருங்கிய கூட்டாளியாக கருதப்படுவதால் பெலாரஸ் அரசுக்கும் இறுதிச் சடங்கிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

தொடர்ந்து, மியான்மரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து அந்நாட்டிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதேபோல் சிரியா, ஆப்கானிஸ்தான், வெனிசுலா நாடுகளும் இறுதிச் சடங்கில் பங்கேற்கப் போவதில்லை.

அதேசமயம், வட கொரியா மற்றும் நிகரகுவா நாடுகளுக்கு தூதரக மட்டத்தில் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்