லிஸ் டிரஸூக்கு ஓராண்டு சம்பளம் இவ்ளோவா! - அரசின் சலுகையை பெறுவாரா லிஸ் டிரஸ்?

x

இங்கிலாந்தில் முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

வெறும் 45 நாட்கள் மட்டும் பிரதமராக பதவி வகித்த முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ், பதவி விலகிவிட்ட நிலையில்,

வாழ்நாள் முழுவதும் அவருக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட இருப்பது தான் தற்போது விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு, இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து மார்கரெட் தாட்சர் விலகிய நிலையில்,

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து பிரதமர் பதவியை அலங்கரித்த அவரை சிறப்பிக்கும் விதமாக 1991 ஆம் ஆண்டு இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, முன்னாள் பிரதமர்கள் தங்களின் பொது செலவுகளுக்காக ஆண்டோன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அரசிடம் பெற்று கொள்ள முடியும்

இந்த தொகை தனிப்பட்ட செலவிற்கு பயன்படுத்த கூடாது என்ற விதியும் உள்ளது.

இப்படி தற்போது இங்கிலாந்தில் 5 முன்னாள் பிரதமர்கள் அரசின் இந்த சலுகையை பெற்று வருகிறார்கள்.

அவர்கள் வரிசையில், லிஸ் டிரஸூம் தனது பங்கிற்கு இந்த சலுகையை நாடினால், ஆண்டொன்றுக்கு முன்னாள் பிரதமர்களுக்கு மட்டும் சம்பளமாக 7 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டியிருக்கும்.

விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடியால் தள்ளாடி வரும் இங்கிலாந்து அரசுக்கு இது கூடுதல்

நிதி சுமையை ஏற்படுத்தும் என்பதே பலரது எதிர்ப்புக்கு காரணம்.

தற்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பியாக உள்ள லிஸ் டிரஸ், ஏற்கனவே ஆண்டுதோறும் 68 லட்ச ரூபாய் வரை சம்பளமாக பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்