டாஸ்மாக்கில் மாமூல் கேட்டு ரகளை.. தீயாய் பரவும் வீடியோ | Salem

x

சேலத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்களிடத்தில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சேலம் வாழப்பாடி பகுதியில் டாஸ்மாக் கடை பணியாளரிடம், நபர்கள் சிலர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் அவர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களிடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தகராறு செய்தவர்கள் இருவரையும் பிடித்த பொதுமக்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்