#Breaking|| ஓபிஎஸ் நீக்கம் செல்லுமா? செல்லாதா? - முடிவை சொல்லும் தேதி.. தேர்தல் ஆணையம் ஒப்புதல்

x
  • கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்க கோரி எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று காலை விசாரிக்கிறது
  • இது தொடர்பாக எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்த ரிட் மனுவில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்களை நிறுத்த கட்சி திட்டமிட்டுள்ளது. எனவே வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையிலும், கட்சியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.
  • ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதன் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ரிட் ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருஷிந்திர குமார் கௌரவ் இன்று காலை விசாரிக்கிறார்.
  • கட்சியில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி அஇஅதிமுக, எடப்பாடி கே பழனிசாமியின் ரிட் மனு மீதான விசாரணையிலிருந்து நீதிபதி பிரதீபா எம். சிங் நேற்று முன் தினம் விலகியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்