#BREAKING || வேங்கைவயல் சம்பவம்.. DNA டெஸ்ட் - வர மறுத்த அந்த 8 பேர் யார்..?

x

வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வர முடியாது என்று சிபிசிஐடி போலீஸ் ஆக இடம் தெரிவித்து விட்டனர் மீதமுள்ள மூன்று பேர் மட்டும் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட உள்ளது

வேங்கைவயல் விவகாரத்தில் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றும் ஒரு காவலர் முரளி ராஜா உட்பட 9 பேர் இறையூர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் தலா ஒரு பேர் என மொத்தம் 11 பேரில் டி என் ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவுபடி இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக மாறு 11 பேருக்கும் சிபிசி போலீசார் கோர்ட்டு உத்தரவை அனுப்பி இருந்தனர்

இந்த நிலையில பயிற்சி காவலர் முரளி ராஜா இறையூர் மட்டும் கீழ முத்துக்கடை சேர்ந்த இரண்டு நபர்கள் ஆகியோர் மட்டும் இன்று டி என் ஏ பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவத்துறை இயல் கூட்டத்திற்கு ஆஜராகி உள்ளனர்

வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் இன்று டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு நாங்கள் வரமாட்டோம் என்று சிபிசிஐடி போலீஸ் அவரிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது இதனால் பரபரப்பான சூழலை ஏற்பட்டுள்ளது

இன்று ஆஜராகி உள்ள மூன்று நபர்களுக்கு மட்டும் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்