#Breaking|| பல் உடைப்பு சம்பவத்தில் திருப்பம்.. மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

#Breaking|| பல் உடைப்பு சம்பவத்தில் திருப்பம்.. மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
Published on

அம்பை பல் உடைப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ ஆவணங்கள் வெளியாகி உள்ளது.

சிகிச்சைக்கு வந்த 20 நாட்களிக்கு முன் 7 பல்வரை உடைந்துள்ளதாகவும் ஆவணத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் விசாரணைக்கு சென்ற நாளில் இருந்து 20 வது நாள் பரிசோதனைக்கு சென்றது குறிப்பிடபட்டுள்ளது.

கடந்த 10 ம் தேதி அடிதடி வழக்கில் விகே புரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் உட்பட சிலர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

விசாரணையின் போது அருண்குமார் மற்றும் அவரது 17 வயதுடைய சகோதரரும் காவல் நிலையத்தில் ரத்த காயம் ஏற்பட்டதாக அவர்களது தாய் தகவல்.

ஜாமினில் வெளியே வந்த அருண்குமார் மற்றும் 17 வயது சிறுவனுக்கு பல் சிகிச்சைக்காக காவல்கிணறு பகுதியில் கடந்த 31 ம் தேதி பல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த ஆவணங்கள் வெளியாகி உள்ளது.

அந்த ஆவணத்தில் 20 நாட்களுக்கு முன் சிகிச்சை பெற்ற அருண்குமாரின் பல் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் அந்த ஆவணத்தில் அருண்குமாருக்கு முன்பல் சேதமாகியுள்ளது.

மேல் தாடையில் இடது பக்கம் 2 வது பல் மற்றும் கீழ் தாடையில் 3 பல் உடைந்துள்ளது.

வாயில் உள்ள பல் பல இடங்களில் உடைந்துள்ளது. பல் சொத்தையும் உள்ளது.

முன் பல் அடைக்கவும் இடது பக்கம் கடவா பல் எடுக்கவும் பரிந்துரைக்குட்பட்டுள்ளது.

மொத்தமாக 7 பல் சேதமடைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com