#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு - 3ஆவது நீதிபதி இன்று விசாரணை

x

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை என குறிப்பிட்டு வாதங்களை நிறைவு செய்தார். இதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மேகலா தரப்பு பதில் வாதங்களுக்காக, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்