பட்டபகலில் வீடு புகுந்து பெண்ணின் தாலி பறிப்பு; சாலையில் உருண்டோடி தப்பி சென்ற திருடன் - அதிர்ச்சி காட்சிகள்

x

கோவையில், மர்மநபர் பட்டபகலில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலியை பறித்து, சாலையில் விழுந்து உருண்டோடியபடி தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவை சிங்காநல்லூரை சேர்ந்த செல்வி என்பவர், பணிக்கு செல்வதற்காக வீட்டின் கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டின் வாயிலில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர், செல்வி கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை பறித்துச் சென்று, இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றார். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்