#Breaking|| மக்கள் உயிரோடு விளையாடிய 51 Fake மருத்துவர்கள் கைது.. தமிழகத்தில் அதிர்ச்சி

x

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் அடையாளம் கண்டு கைது செய்ய தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்


அதன்படி கடந்த மூன்று நாட்களில் மருத்துவம் படிக்காமல் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவத் தொழில் செய்து வருபவர்களை சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தேனி உட்பட எல்லையோர மாவட்டங்களில் இதுவரை 51 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

கொரோனாவுக்கு பிறகு சளி, காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவரை நாடி செல்லும் பழக்கம் அதிகமானதாலும், எல்லை மாவட்டங்களில் போலி மருத்துவர்கள் அதிகம் இருப்பதாலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளா ஆந்திராவில் மருத்துவராக பயில்வதற்கான விதிகள் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் மருத்துவராக பயில்வதாக புகார்கள் வந்ததன் காரணமாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு, காவல்துறை உதவியுடன் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்