நெய்மர் இல்லாமல் களமிறங்கும் பிரேசில்.. ரொனால்டோவுக்கு அடுத்த சோதனை

x

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. குரூப்-ஜி பிரிவில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கேமரூன்-செர்பியா அணிகள் மோதுகின்றன. இரு அணிளும் தலா 1 போட்டியில் தோற்று இருப்பதால், இன்றையப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

குரூப்-ஹெச் பிரிவில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் மற்றொருப் போட்டியில் தென் கொரியா, கானாவை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

குரூப்-ஜி பிரிவில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில், சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது. நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாமல் பிரேசில் இன்று களமிறங்கவுள்ள நிலையில், சுவிட்சர்லாந்து கடும் சவால் அளிக்கக்கூடும்...

இதேபோல் குரூப்-ஹெச் பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் உருகுவேவை, போர்ச்சுகல் எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற போர்ச்சுகல், இன்று வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் அதிகம்...


Next Story

மேலும் செய்திகள்