கோப்பையை வென்றதும் வேலையை காட்டிய பிராவோ.. கடுப்பில் MI கோச் பொல்லார்டு?

x

ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து, அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ, தனது நண்பர் பொல்லார்டை சீண்டியுள்ளார். இந்தாண்டு சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியளராக பிராவோ பொறுப்பேற்ற நிலையில் அந்த அணி கோப்பை வென்றது. அதேநேரத்தில் அவரது நண்பர் பொல்லார்ட் பேட்டிங் பயிற்சியளாராக செயல்பட்ட மும்பை அணி, இரண்டாம் குவாலிபயருடன் வெளியேறியது. இந்தநிலையில் ஐபிஎல் இறுதி போட்டியில் வென்ற பின் பேசிய பிராவோ, தான் பயிற்சியளராக கோப்பை வென்றுள்ளதை மறைமுகமாக குறிப்பிட்டு, இதை எனது நண்பர் பொல்லார்ட் பார்த்துக்கொண்டிருப்பார் என நம்புகிறேன் என்றும், நான் செய்ததை அவர் செய்ய வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்