10ம் வகுப்பு மாணவியை கொன்ற காதலன்.. போலீஸில் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்

x

கும்மிடிப்பூண்டி அருகே10-ஆம் வகுப்பு மாணவி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் திடீரென மாயமானார்.

ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அடுத்த ஆராமணி ஏரியில் கழுத்தில் காயத்துடன் மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மரு்ததுமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, முக்கரம்பாக்கத்தை சேர்ந்த19 வயது பிரவீன், 17 வயது சிறுவனையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

பிரவீன்-க்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகவும், திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், சிறுவனுடன் சேர்ந்து மாணவியின் தலையில் கட்டையால் அடித்தும், கழுத்தை நெறித்தும் பிரவீன் கொலை செய்து, மாணவியை ஏரியில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்