குளிக்க சென்று மாயமான சிறுவன்..6 நாட்களாக தேடியும் கிடைக்காத அவலம்..பின்வாங்கிய மீட்பு குழு அதிர்ச்சியில் உறவினர்கள்..!

x

ஓசூர், டிவிஎஸ் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். 16 வயதான இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கூட்டூர் வனப்பகுதியில் உள்ள தென்பனையாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாரத விதமாக ஜெகதீசன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக தீயணைப்பு துறையினர் சிறுவனை தேடி வந்த நிலையில், சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் முகாமிட்டு சிறுவனை தேடி வந்தனர். ஆற்றில் சல்லடை போட்டு அலசியும் சிறுவன் கிடைக்காததால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை தேடும் முயற்சியில் இருந்து பின்வாங்கினர். இது அப்பகுதி மக்களையும், சிறுவனின் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் 6 நாட்களாக தேடியும் கிடைக்காதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்