நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சிறுவன்.. கடைசி நிமிடம்.. தந்தையுடன் நடனம் - நெஞ்சை கலங்க வைக்கும்...வீடியோ

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் - தாரிகா தம்பதியருக்கு சஸ்வின் வைபவ் என்ற 6 வயது மகனும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். தனது குழந்தைகளுடன் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நீலமங்கலத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு நந்தகுமார் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி சிறுவன் சஸ்வின் வைபவ் உயிரிழந்தான். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நீச்சல் குளம் முறையான பாதுகாப்புகள் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில், குன்றத்தூர் வட்டாட்சியர் நாராயண் மற்றும் கிராம அலுவலர் வீரராகவன் தலைமையில் நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து நீச்சல் குளத்தின் உரிமையாளர்களான நாகராஜன் மற்றும் அவரது மகன் பிரபுவை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், சஸ்வின் வைபவ் உயிரிழப்பதற்கு முன்பு, அவரை நடனமாடச் சொல்லி அவரது தந்தை படம்பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் கலங்கடித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com