திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளை பார்க்க தாய் அனுமதிக்காததால் சிறுவன் விபரீத முடிவு

x

திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை காண தாய் அனுமதிக்காததால், 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே புதுவிளை சானல்கரை பகுதியை சேர்ந்தவர் தீபக். 14 வயது சிறுவனான இவர், அருகே உள்ள கோயில் திருவிழாவின் கலை நிகழ்ச்சியை காண நண்பர்களுடன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். இதற்கு சிறுவனின் தாய் அனுமதிக்காத நிலையில், அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியில் இருந்த தீபக், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்