50 அடி கிணற்றில் சிறுவன் அழுகுரல்... உயிருக்கே வினையாகவிருத்த 'தாகம்' - கடைசியில் நடந்த அதிசயம்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 12 வயது சிறுவனை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். குருக்கள்பட்டி கிராமத்தில் மகாராஜா என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்காக, இறங்கிய போது கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை கயிறு கட்டி உள்ளே இறங்கி பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்