2 நாட்களாக உயிரை பிடித்து கொண்டு பாலத்தின் தூண் இடுக்கில் சிக்கி தவிக்கும் சிறுவன் - அதிர்ச்சி காட்சிகள்

x

பீகார் பாலத்தின் தூண்களுக்கு இடையே சிக்கி கொண்ட 12 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பீகார் மாநிலம் நஸ்ரிகஞ்ச் பகுதியில் ஆற்றின் மூலம் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் தூண்களுக்கு இடையே உள்ள விரிசலில் சிறுவன் ஒருவர் சிக்கி இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணை, அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன் விட்டில் இருந்து காணாமல் போனதும் தெரியவந்த‌து. தொடர்ந்து, அந்த சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் குழாய்களின் உதவியுடன், விரிசல் உள்ளே போதுமான அளவு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்