ஆப்கான் மத பள்ளியில் குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான் பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் காபூலுக்கு வடக்கே சுமார் 200கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அய்பக்கில் அமைந்துள்ள இஸ்லாமிய மத பள்ளியான அல் ஜிஹாத் மதராஸாவில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் குழந்தைகள், பொதுமக்கள் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com