போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட் நடிகை கைது....திட்டமிட்டு சிக்கவைத்த நபர்...பிறகு நடந்த ட்விஸ்ட்

x

27 வயதாகும் கிரெசன் பெரேரா பட்லா ஹவுஸ், சடக் 2 போன்ற ஏராளமான பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற ஒரு நடிகை. இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி சார்ஜாவில் ஒரு வெப் சீரியஸ் ஆடிஷனுக்கு சென்றிருக்கிறார் கிரெசன் பெரேரா. சார்ஜா விமான நிலைய சோதனையின் போது கிரெசன் பெரேராவின் கையில் வைத்திருந்த பரிசு கோப்பை ஒன்றில் போதை பொருட்கள் இருந்திருக்கிறது. இதனை கண்ட அந்நாட்டு போலீசார் போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக நடிகையை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இந்த தகவல் அறிந்து பதறிபோன கிரெசன் பெரேராவின் தாய் பிரமிளா, இது திட்டமிட்ட சதி என்றும், தனது மகளுக்கே தெரியாமல் அவரது உடைமையில் போதை பொருளை வைத்து சிக்க வைத்திருப்பதாகவும் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் தனது மகளை சார்ஜாவுக்கு அனுப்பி வைத்தது, அந்தோணி பால் மற்றும் ராஜேஷ் போக்டோ எனவும் தெரிவித்திருக்கிறார்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்தோணி பாலையும், ராஜேஷ் போக்டோவையும் கைது செய்து விசாரனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது தான் ஒரு நாய் சண்டையில் திட்டமிட்டே நடிகையை சிறைக்கு அனுப்பி இருப்பது தெரியவந்திருக்கிறது.

குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கிரெசன் பெரேராவுக்கும், அதே குடியிருப்பில் வசிக்கும் அந்தோணி பாலின் சகோதரிக்கும் கொரோனா காலத்தில் நாய் வளர்ப்பது தொடர்பாக சண்டை வந்திருக்கிறது.

அந்த சண்டைக்கு சிபாரிசு பேச வந்த போது, அந்தோணிபாலுடனும் கிரெசன் பெரேராவின் தாய்க்கும் வாக்குவாதம் முற்றி இருக்கிறது. இந்த சண்டை ஓயாமால் இரண்டு வருடமாக நீடித்து வந்த நிலையில், கிரெசன் பெரேராவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என திட்டம் தீட்டி வந்திருக்கிறார் அந்தோணி பால். இதனால் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் போக்டோவிடம் நடந்ததை கூறி முறையிட்டிருக்கிறார்.

இருவரும் சேர்ந்து கிரெசன் பெரேராவை பழிவாங்க நினைத்து இந்த போதை பொருள் திட்டத்தை போட்டிருக்கிறார்கள். ராஜேஷ் ஒரு சினிமா கம்பெனி மேனேஜர் என கிரெசன் பெரேராவிடம் அறிமுகமாகி உள்ளார். சார்ஜாவில் வென் சீரியசுக்கான ஆடிஷன் நடப்பதாக ஆசை காட்டி கிரெசனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது கிரெசனுக்கே தெரியாமல் அவரது உடைமையில் போதை பொருளை போட்டு போலீசில் சிக்க வைத்தது விசாரனையில் உறுதியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மகளை சிறையிலிருந்து வெளியே எடுக்க குடும்பமே சேர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். 25 நாட்களுக்கு பிறகு கிரெசன் பெரேரா அதிஷ்டவசமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்