பாடி ஸ்பிரே, நெயில் பாலிஸால் உயிர் ஆபத்து... சாவை சட்டை பையில் வைப்பதற்கு சமம் - நறுமணத்தில் எமன்.. எச்சரிக்கும் டாக்டர்

x

டியோடரன்ட் உள்ளிட்ட வாசனை திரவியங்களை அளவுக்கு அதிமாக முகர்வதால் ஏற்படும் உயிராபத்து குறித்து உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு...

நம் அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத சக்தியாக மாறிவிட்டது சமூக வலைதளங்கள். ஒவ்வொரு மனிதனின் பொழுதுபோக்கு புகலிடமாகவும் உள்ளது.

அந்த வகையில், சமூக வலைதளங்களில் சிலர் ஏதாவது ஒரு செயலை செய்து அதை போல் மற்றவர்களும் செய்ய சேலஞ்ச் செய்வது ஒரு வகை பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது.

வொர்க் அவுட் செய்வது, நடனம் ஆடுவது, சாப்பிடுவது, குளிர்ந்த நீரை பக்கெட்டில் நிரப்பி உடலில் ஊற்றி கொள்வது என பல சேலஞ்ச் ட்ரெண்டாகி வருகிறது, இதனை சாமானியர்கள் தொடங்கி பிரபலங்கள் செய்து காட்டி மகிழ்ச்சி கொள்கின்றனர்.

அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளது தான் "க்ரோமிங்" என்று சொல்லக்கூடிய வாசனை திரவியங்களை முகர்ந்து பார்க்கும் சேலஞ்ச்.

இந்த சேலஞ்சில் ஈடுபட்ட ஆஸ்த்ரேலிவைச் சேர்ந்த13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நச்சு பொருட்களை உள்ளடக்கிய மருந்துகளை முகரும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு தான் இந்த "க்ரோமிங்". க்ரோமிங் சேலஞ்ச்சில் டியோடரன்ட்டை அளவுக்கு அதிமாக முகர்ந்து உயிரை பறிகொடுத்துள்ளார் இந்த சிறுமி...

ஆம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் Deodrants,Hairspray, Nail Polish, Markers, Glue போன்ற பொருட்களிலும் பெட்ரோல், பெயிண்ட், சுத்தம் செய்யும் கலவைகள் போன்றவற்றிலும் நச்சுத்தன்மை நிறைந்துள்ள இரசாயணங்கள் உள்ளன.

இதனை அளவுக்கு அதிகமாக முகரும் போது வாந்தி, மயக்கம், மூச்சு திணரல் ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே நம் சுவாச குழாய்களில் நச்சு நிறைந்து உயிருக்கே பேராபத்தை விளைவிக்கிறது.

இது குறித்து மருத்துவர் அசோக் கூறுகையில்,

டாக்டர் அசோக்குமார்

அதுமட்டும் இன்றி மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல சமூக வலைத்தளங்களில் உலாவரும் அனைத்தையும் அளவோடு பாவிப்பது நன்மை தரும்.


Next Story

மேலும் செய்திகள்