எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து சடலம் மீட்பு.போலீசார் தீவிர விசாரணை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கேரளாவில் எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து, அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ரப்பர் தோட்டம் அருகே கார் ஒன்று எரிந்து கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த காரை அணைத்து, அதில் இருந்த அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டனர். இந்நிலையில், அந்த நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து, காருடன் வைத்து எரித்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com