சவுதியில் உயிரிழந்த 2 பேர் உடல்கள் தமிழகம் வருகை ...

x

சவூதி அரேபியா ரியாத் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேர் உடல்கள் சென்னை வந்ததும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். கடந்த 4ஆம் தேதி ரியாத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் சேலத்தை சேர்ந்த சீதாராமன் ஆகியோரது உடல்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அந்த உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழக அரசின் சார்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்