கங்கை ஆற்றில் கவிழ்ந்த படகு... 4 பேர் பலி - 36 பேர் நிலை என்ன..?

x

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தின் மால்தேபூர் பகுதிக்கு அருகே கங்கை ஆற்றில் 40 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். காயம் அடைந்த 4 பெண்கள் மீட்டு மருத்துவமனையில் மீட்புக் குழுவினர் அனுமதித்தனர். குழந்தைகளுக்கு பூஜை செய்வதற்காக சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்த நிலையில், தலைமறைவான படகோட்டியை போலீசார் தேடி வருகின்றனர். பலத்த காற்று மற்றும் எஞ்சின் கோளாறால் படகு கவிழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படகில் யாரும் சிக்கவில்லை என்று உறுதியான தகவல் வரும் வரை மீட்பு பணி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்