இது BMW-வா..? மாருதி 800 -ஆ..? - தன் கனவை நிறைவேற்றிய நடிகர்... இப்போ ஊரு கண்ணே கார் மேலதான்!

x

நாமக்கல் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ஆட்டோ ராஜா. இவர் ஒரு சில திரை படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு நீண்டகாலமாகவே பி.எம்.டபிள்.யூ காரை வாங்க வேண்டுமென விருப்பம் இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த காரை வாங்க முடியாததால் தனது மாருதி 800 (EIGHT HUNDRED) காரையே அவர், மினி பி.எம்.டபுள்யூ-வாக மாற்றி அசத்தியுள்ளார். மியூசிக் சிஸ்டம், ஸ்போர்ட்ஸ் ஸ்டேரிங், டயரில் முல்லட் செட் என அந்த காரை தான் விரும்பியவாறு மாற்றியுள்ளார். காரை விரும்பியவாறு மாற்றியமைக்க 3 மாத காலம் ஆனதாக ஆட்டோ ராஜா கூறிகிறார். ஆட்டோ ராஜா தனது காரை ஓட்டி செல்லும்போது, அனைவரது கண்களும் காரின் மீதே இருக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்