சென்னை ஏரியில் பீறிட்ட ரத்தம்.. பின்னணியில் ஓர் அந்தரங்கம்.. பயங்கரம்.. கொடூரம்

x

சென்னையில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த உறவினரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சென்னையை அடுத்த பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் விஜயகாந்த். இவரது மனைவி ரேணுகா.

ரேணுகாவின் உறவினரான தர்மபுரியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர், வேலை இல்லாமல் சுற்றித் திரிந்ததால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார். ரேணுகாவின் வீட்டில் தங்கிய ராஜீவ்காந்திக்கு, அவரது கணவர் விஜயகாந்த், வேலை ஒன்றையும் வாங்கித் தந்துள்ளார்.

இதனிடையே, கடந்த 16ம் தேதி வேலைக்கு சென்ற ராஜீவ்காந்தி, வீட்டிற்கு திரும்பாததால், அவரை தேடி ரேணுகா மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து, துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பெருங்குடி ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், உயிரிழந்து கிடந்தவர், காணாமல் போன ராஜீவ்காந்தி என்பதை உறுதி செய்தனர்.

சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், ராஜீவ்காந்தியின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது.

கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், ராஜீவ்காந்தியின் உறவினர் ரேணுகாவையும், அவரது கணவர் விஜயகாந்தையும் போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விஜயகாந்த் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.

பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தியபோது, விஜயகாந்த்திடம் இருந்து பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

திருமணமாகி வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்த ராஜீவ்காந்தியை சென்னைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்துள்ளார் விஜயகாந்த். சில நாட்கள் கட்டுமான வேலைக்கு சென்ற ராஜீவ்காந்தி, மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விஜயகாந்திற்கு திடீரென ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. தனது மனைவி ரேணுகாவுடன் தகாத உறவில் இருக்கிறாரோ? என சந்தேகம் எழ, இதுதொடர்பாக ராஜீவ்காந்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த்.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி, ராஜீவ்காந்தியை பெருங்குடி ஏரி அருகே அழைத்துச் சென்று மது அருந்திய விஜயகாந்த், மனைவியுடான தகாத உறவு குறித்து மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜீவ்காந்தியின் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு, உடலை ஏரியில் வீசியதும், கொலை செய்ததை மறைக்க ராஜீவ்காந்தியை தானும் தேடுவதுபோல போலீசாரிடம் சேர்ந்து தேடியதும் விசாரணையில் அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தியை கொலை செய்த விஜயகாந்தை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்