திரிபுரா, நாகாலாந்தில் பாஜக அமோக வெற்றி..

x
  • நாகாலாந்தைத் தொடர்ந்து திரிபுராவிலும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது...

  • மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 58 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • எஞ்சியுள்ள 2 தொகுதிகளுக்கான முடிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன.
  • இதில் பாஜக 30 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
  • பாஜகவின் கூட்டணி கட்சியான IPFT 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
  • காலை முதல் இழுபறி நிலவிய நிலையில், அங்கு தொங்கு சட்டசபை ஏற்படலாம் என்று கருதப்பட்டது.
  • இந்நிலையில், ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில்பாஜக கூட்டணி மொத்தம் 33 இடங்களை பெற்றெடுப்பதன் மூலம் அங்கு ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகி உள்ளது.
  • கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிபிஎம் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புதிய பிராந்திய கட்சியான திப்ரா மோதா 13 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்