தேர்தல் ஆணையத்தை கண்டித்து பாஜகவினர் போராட்டம்.... 14 பேர் உயிரிழப்பு

தேர்தல் ஆணையத்தை கண்டித்து பாஜகவினர் போராட்டம்.... 14 பேர் உயிரிழப்பு
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பயங்கர வன்முறை வெடித்தது. வாக்குச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில்,வாக்குப்பதிவை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யத் தவறிய மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், ஆளும் மம்தா அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதால் மேற்குவங்கத்தில் குடியரசுதலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com