மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி முன் பாஜக பெண் நிர்வாகி குமுறல்...கை தட்டிய மொத்த அரங்கம் - வைரல் வீடியோ

x

குஜராத் மாநிலத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம், கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக பாஜக பெண் நிர்வாகி பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அரங்கு ஒன்றில் ஸ்மிரிதி இரானி பேசிக் கொண்டிருந்த போது, பெண் நிர்வாகி ஒருவர் பேசினார். தனக்கு மூன்று மகள்கள் இருப்பதாகவும், கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனால், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பது, பாஜக நிர்வாகிகளின் கோரிக்கையாக உள்ளதாகவும் கேட்டுக் கொண்டார். இதற்கு, அரங்கில் இருந்தவர்கள் கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்