"பாஜக பெரும்பான்மை பெறும்.." நிராகரித்த கர்நாடக முதலமைச்சர்

x

காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும் என வெளியாகியிருக்கும் கருத்து கணிப்புகளை பசவராஜ் பொம்மை நிராகரித்துள்ளார். உப்பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை, கடந்த தேர்தலில் பாஜகவுக்கு 80 இடங்களும், காங்கிரசுக்கு 107 இடங்களும் கிடைக்கும் என கணிப்புகள் வெளியானது, ஆனால் தேர்தல் முடிவு மாறாகவே வந்தது எனக் குறிப்பிட்டார். பாஜக களத்தில் மேற்கொண்ட ஆய்வுபடி தாங்கள் பெரும்பான்மை இடங்களை பிடிப்போம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பசவராஜ் பொம்மை, பெலகாவில் உள்ள எல்லையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்