"காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த பாஜகவினர்" - 3 பேர் மீது பாய்ந்த வழக்கு

x

திருப்பத்தூரில் காவல்துறையினரை ஆபாசமாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்த, பாஜகவினர் மாநில நிர்வாகி உட்பட 3 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் பாஜக நிர்வாகியின் சவ ஊர்வலத்தின் போது, பெண் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை, பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அவர்கள், வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து,

எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து, காவலர்களை தரக் குறைவாக பேசிய பாஜக பிரமுகர்கள் வெங்கடேசன், வாசுதேவன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீது திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில், 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்