பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது

x

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை புதுச்சேரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மழை பாதிப்பு இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த கிஷோர் கே சாமி, அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோர் கே சாமியை தேடி வந்தனர். இதனிடையே அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்த போலீசார், 4-வது வழக்கில் கிஷோர் கே சாமியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, இந்த புதிய வழக்கில் கிஷோர் கே சாமி முன்ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்