இளம் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட பாஜக மாணவர் அமைப்பு நிர்வாகி கைது

x

கர்நாடகாவில் இளம்பெண்களுடன் வீடியோ காலில் பேசி, அந்தரங்க புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக பாஜக மாணவரமைப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹல்லி தாலுகாவில் பாஜக மாணவர் அமைப்பு நிர்வாகியாக இருப்பவர் பிரதீக் கவுடா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த சில கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரதீக் கவுடாவை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து செல்போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை எடுத்து அவர்களிடம் ரகசிய விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்