பாஜக பதவிக்காக சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட நபர் - கம்பி எண்ண வைத்த கோவை போலீஸ்

x
  • கோவையில் பாஜக கட்சியில் பதவி வேண்டி, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலை முயற்சி என நாடகமாடியவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
  • மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், பாஜக நிர்வாகிகள் உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமாரிடம் தன்னை பாஜக கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்குமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
  • ஆனால், இருவரும் காலம் தாழ்த்தியதால், விஸ்வநாதன் ஆத்திரம் அடைந்து, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டதோடு, தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமார் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
  • இது தொடர்பான போலீஸ் விசாரணையில், கட்சியின் பதவி பெறும் நோக்கில் இருவர் மீதும் குற்றம் சுமத்தி விஸ்வநாதன் நாடகமாடியது தெரியவந்ததால், விஸ்வநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்