பாஜகவிற்கு மிக முக்கியமான தேர்தல்...திடீர் ஷாக் கொடுத்த எம்எல்ஏக்கள் - கலக்கத்தில் தலைமை | Gujarat

x

பாஜகவிற்கு மிக முக்கியமான தேர்தல்...திடீர் ஷாக் கொடுத்த எம்எல்ஏக்கள் - கலக்கத்தில் தலைமை

182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 166 இடங்களுக்கான வாக்காளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்கள் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாததால்

அதிருப்தியடைந்துள்ள பாஜகவினர் சொந்த கட்சிக்கு எதிராக திரும்பியுள்ளனர். தற்போது பாஜக எம்.எல்.ஏவாக இருக்கும் மது ஸ்ரீவஸ்தாவ், ஏற்கனவே நன்டோட் தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதே போல் முன்னாள் பாஜக எம்.எல்.ஏக்கள் 4 பேர், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சுயேட்சையாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளாது. ஏற்கனவே ஹிமாச்சலிலும் இது போல் பல தொகுதிகளில் பாஜகவினர் எதிராக பாஜகவினரே சுயேட்சையாக களமிறங்கி சொந்த கட்சிக்கு நெருடிக்கடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்