பாஜகவின் மிஷன் சவுத்... தெலுங்கானாவுக்கு டார்க்கெட்.! | BJP | Telungana

பாஜகவின் மிஷன் சவுத்... தெலுங்கானாவுக்கு டார்க்கெட்.!
x

பாஜகவின் மிஷன் சவுத்...

தெலுங்கானாவுக்கு டார்க்கெட்!

அமித்ஷா நீண்ட கால வியூகம்

ஐதராபாத்தில் பாஜக செயற்குழு கூட்டம்

2023-ல் சட்டப்பேரவை தேர்தல்

"தெலுங்கானாவை கைப்பற்றுவோம்"

பாஜக நிர்வாகிகள் உற்சாகம்

தெலுங்கானாவை கைப்பற்றுவோம் என பாஜக கூறிவரும் நிலையில், ஐதராபாத்தில் தொடங்கியிருக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கவனம் பெற்றிருக்கிறது. அம்மாநிலத்தில் பாஜக பலம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்...

பிரீத் (அமித்ஷா, மோடி வருகை குஷ்பு நடனம்)

வாகன பேரணி... பாஜக தலைவர்களுக்கு ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு என ஐதராபாத்தில் பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது.

18 ஆண்டுகளுக்கு பின்னர் ஐதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுவது தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. ஐதராபாத்தில் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என மே மாதம் பிராந்திய நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன்படி தேசிய தலைமை சம்மதித்ததாக கூறப்படுகிறது.

இதையொட்டி பாஜக நிர்வாகிகள் பலரும் இனி தெலுங்கானாவில் பாஜக ஆட்சியமைக்கும் என உற்சாகமாக கூறிவருகிறார்கள். பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்த ஐதராபாத்தை தேர்வு செய்வதற்கு பின்னணியில் மிஷன் சவுத் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் பாஜக தனித்து ஆட்சி செய்யும் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது. இந்த வரிசையில் அடுத்ததாக கால் பதிக்க தெலுங்கானாவை இலக்காக வைக்கிறது பாஜக. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நீண்ட கால வியூகமும் இதுவே. தெலுங்கானாவில் அடுத்த அரசு பாஜக அரசாக இருக்கும் என சூளுரைத்து வருகிறார் அமித்ஷா.

சந்திர சேகராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி வலுவாக இருக்கும் மாநிலத்தில் காங்கிரஸ் மெல்ல பலவீனமடைய எதிர்க்கட்சி இடத்தை நிரப்ப முயற்சித்து வருகிறது பாஜக.

gfx in

மாநிலத்தில் 2018 சட்டப்பேரவை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வென்றிருந்த பாஜக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 4 இடங்களை வென்று ஆச்சர்யமளித்தது. மாநிலத்தில் 2020 துப்பாக்கா இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை வீழ்த்தியது பாஜகவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. 150 இடங்களை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 55 இடங்களை வென்றிருந்த நிலையில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தது. 2021 ஹுசுராபாத் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அக்கட்சி வெற்றிப்பெற்றது. மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பாஜக பதிவு செய்துவருவது பாஜகவினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

மாநிலத்தில் வருகிற 2023 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்திருக்கிறது.


பாஜகவின் இந்த வெற்றி மாநிலத்தில் பலமாக இருக்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு சவாலாக அமையுமோ என்னவோ, காங்கிரசுக்கு சவாலாகும் என்பது அரசியல் நோக்கர்கள் பார்வையாக இருக்கிறது. தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தென்னிந்தியாவில் கவனத்தை ஈர்க்கவும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நடத்தப்படுகிறது எனக் கூறும் அவர்கள், வாக்காளர்களின் ஆதரவை பெறுவதற்கு பாஜக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

காங்கிரசை பின்னுக்கு தள்ளி பாஜக 2 ஆம் இடத்தை பிடிக்குமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பதும் அவர்களது பார்வையாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்