மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளரிடம் பேரம்... ஆடியோ சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்

கர்நாடக அமைச்சராக இருக்கும் சோமண்ணா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் சாம்ராஜ்நகர் தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் மல்லிகார்ஜுன சாமியிடம் வேட்பு மனுவை திரும்ப பெறும் படி பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் வாபஸ் மனு திரும்பப் பெற சுமார் 50 லட்சம் ரூபாய் பணம் தருவதாக கூறப்பட்டது மட்டுமில்லாமல், எதிர்காலத்தில் அரசியல் பதவிகள் தரப்படும் என பேரம் பேசப்பட்டது. இந்த ஆடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் கட்சி புகார் மனு அளித்த நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவின்படி அமைச்சர் சோமண்ணா அவரது ஆதரவாளர்கள் நடராஜ், சுதீப் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com